2011ஆம் ஆண்டு தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவருமான மு.க.அழகிரி தொடர்பான வழக்கிலும் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரான அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கோவிலில் அழகிரி மற்ற திமுக தொண்டர்களுடன் கூடி திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. அதை தாசில்தார், வீடியோகிராபர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, நிகழ்ச்சியை வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தாசில்தாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அழகிரி மற்றும் பிற திமுக நிர்வாகிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.