முன்னாள் செஸ் உலக சாம்பியனான போரீஸ் ஸ்பாஸ்கி இன்று காலமானார். அவருக்கு வயது 88.
ரஷ்யாவை சேர்ந்த போரீஸ் ஸ்பாஸ்கி, பனிப்போர் காலத்தில் செஸ் உலகில் உச்சத்தில் இருந்தார். உலக ஜூனியர் சாம்பியன், இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியிருந்தார். 1969ஆம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற போரீஸ், 1972ஆம் ஆண்டு வரை அதை தக்க வைத்திருந்தார். 1972ஆம் ஆண்டில் அமெரிக்க வீரர் பாபி பிஷ்ஷரால் தோற்கடிக்கப்பட்டார் போரீஸ்.
1937ஆம் ஆண்டு லெனின்கிராட்டில் (இப்போது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்) பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜெர்மன் நகரத்தை முற்றுகையிட்டபோது, சைபீரியாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து, அவர் 5 வயதில் இருந்தே செஸ் விளையாட ஆரம்பித்தார். 19 வயதில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்நிலையில், தற்போது இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Read More : இந்திய ரயில்வேயில் 1,036 காலிப்பணியிடங்கள்..!! மாதம் ரூ.48,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!