ஓராண்டாக தமிழ்நாடு அரசு திட்டமிட்டும் கைகூடாத ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயமாக இது பார்க்கப்படுகிறது. கார் பந்தயம் காரணமாக, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் பாதிப்படைய வாய்ப்பு இருப்பதால், இந்த போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தான், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இந்த கார் பந்தயத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், போட்டி காரணமாக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 10 மற்றும் 19-வது வளைவுகளில் சில மாற்றங்கள் செய்ய இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் வேகம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு சிக்கல் உருவாக வாய்ப்புள்ளதால் அதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Read More : கோவை டூ சென்னை..!! விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்..!! ஆசையை நிறைவேற்றிய ஊராட்சி தலைவர்..!!