தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் மார்க் ஆண்டனி, லியோ மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கின்றன. தீபாவளிக்கு வெளியான ஜப்பான் திரைப்படம் தோல்வியடைந்து ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளிவரும் திரைப்படங்களுக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான எதிர்பார்ப்புகள் தற்போது இருந்தே களைகட்ட தொடங்கிவிட்டன.
வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவா கார்த்திகேயனின் அயலான் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கவுரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம் ஆகிய திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போது இருந்தே எதிர்பார்ப்புடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். மேலும் இந்த திரைப்படங்களுடன் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை போர் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனால் எந்த திரைப்படங்களுக்கு அதிக தியேட்டர் கிடைக்கும் என்ற கவலையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.