காமம் என்பது கடவுள் நமக்கு அளித்திருக்கும் அழகிய விஷயங்களில் ஒன்று என்று போப் பிரான்சிஸ் வாடிகன் நகரில் நடைபெற்ற ஆவணப்படம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கும் கருத்து பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வாடிகன் நகரில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு ஆவணப்படத்திற்கான கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த 10 ஸ்பெயின் இளம் பேச்சாளர்களுடன் வேடிக்கையான விவாதத்தில் கலந்து கொண்டார் போப் பிரான்சிஸ். அந்தக் காணொளிகள் துவக்கப்பட்டு தற்போது ஒரு ஆவணப்படமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆவணப்படம் கடந்த புதன்கிழமை வெளியாகி இருக்கிறது. அந்த இளைஞர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போப் பிரான்சிஸ் பாலின பாகுபாடு, குழந்தைகளை பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கும் நபர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என பல விஷயங்களைப் பற்றி விவாதித்து இருக்கிறார் போப் பிரான்சிஸ்.
இளைஞர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார் போப் பிரான்சிஸ். நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த விவாதத்தில் பாலினம் தொடங்கி அகதிகள் பிரச்சனை, நிறவெறி மற்றும் இனவெறி, மனம் சார்ந்த பிரச்சனைகள், தன் பாலின ஈர்ப்பாளர்கள், ஆபாச படங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் இளைஞர்கள் போப்புடன் விவாதம் செய்தனர். அவர்களது கேள்விகளுக்கெல்லாம் சளைக்காமல் பதில் அளித்தார் பிரான்சிஸ். மேலும் இந்த நிகழ்வில் பேசிய அவர் தன்பாலினை ஈர்ப்பாளர்களை கத்தோலிக்க தேவ ஆலயங்களுக்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அவர்களையும் சமூகத்தின் உறங்கமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.