fbpx

இளைஞர்களே… OLX செயலி மூலம் கூட்டுறவு வங்கிகளில் வேலை…! மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆட்சியர் தகவல்…!

கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் OLX செயலி மூலம் கூட்டுறவு வங்கிகளில் காலிபணியிடங்கள் நிரப்பபடுவதாக விளம்பரப்படுத்தி மோசடி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; OLX செயலி மூலம்‌ கூட்டுறவு வங்கிகளில்‌ காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள்‌ தேர்வு செய்வதாகவும்‌, சேலம்‌, அம்மாப்பேட்டை, ஓமலூர்‌, மேட்டுர்‌, அந்தியூர்,. பவாணி, கோபிசெட்டிபாளையம்‌, பெருந்துறை. திருப்பூர்‌, எட்டிமடை. காரமடை, நாமக்கல்‌, சேந்தமங்கலம்‌, பரமத்தி வேலூர், தர்மபுரி. கிருஷ்ணகிரி, ஓசூர்‌ பகுதிகளில்‌ கூட்டுறவு வங்கிகளில்‌ பணியிடங்கள்‌ காலியாக உள்ளதாகவும்‌, மேற்பமி காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள்‌ தேர்வு செய்வதாகும்‌. அதன் பொருட்டு நேர்காணல்‌ நடைபெறுவதாகவும்‌, பணியின் பொருட்டு டெபாசிட்‌ தொகை செலுத்த வேண்டும்‌ எனத்‌ தெரிவித்து OLX செயலி மூலம்‌ விளப்பரப்படுத்தி 8220452365 என்ற மொபைல்‌ எண்ணை தொடர்பு கொள்ளத்‌ தெரிவித்துள்ள செய்தி முற்றிலும்‌ பொய்யான செய்தி என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

மேற்படி OLX செயலி மூஸம்‌, பரப்பப்பட்டுள்ள பொய்யான தகவல்களை கொண்டு எவரும்‌, கூட்டுறவு நிறுவனத்தில்‌ வேலை காலியாக உள்ளது என்று நம்பி எவரிடமும்‌, பணத்தையோ, அல்லது உடமைகளை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்‌. எனவும்‌, கூட்டுறவு நிறுவனங்களில்‌ காலிப்பணியிடங்கள்‌ எதும்‌ நிரப்பிட தற்போது கூட்டுறவுத்‌ துறையின்‌ மாவட்ட ஆள்‌ சேர்ப்பு நிலையம்‌ மூலம் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும், மேற்படி பரப்பப்பட்டுள்ள பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள்‌ யாரும்‌, எவரிடமும்‌, பணம்‌, பொருள்‌ உடைமைகளை கொடுத்தால்‌ ஏமாற்றம்படுவீர்கள்‌ எனவும்‌, கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ சமீரன்‌ அவர்கள்‌ பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்‌.

மேலும்‌, இது போன்ற OLX செயலி மூலம்‌ குற்ற நவடிக்கையில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ மீது. உரிய குற்றவியல்‌ நடவடிக்கை தொடரப்படும்‌ எனவும், பொய்யாண செய்திகளை பரப்பி பண மோசடியில்‌ ஈடுபடும்‌ நபர்கள்‌ மீது கடும்‌ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Also Read: 3 ஆண்டுகளில் நடந்த ஒப்பந்த முறைகேடுகள்…! தமிழக அரசுக்கு அறப்போர் கொடுத்த புகார்…!

Vignesh

Next Post

குரங்கு அம்மை எதிரொலி... சென்னையில் மட்டும் 1,000 மருத்துவ பணியாளர்கள் 30 ஆம்புலன்ஸ் தயார்...! அமைச்சர் மா.சு தகவல்...!

Fri Jul 29 , 2022
உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு அம்மை காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு காய்ச்சல்  நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது […]
’மக்களே மீண்டும் லாக்டவுன் வரப்போகுது’..!! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

You May Like