fbpx

பிரபலங்களின் ஜிஎஸ்டி விவரங்கள் மூலம் மோசடி!… எம்.எஸ்.தோனியின் பெயரில் போலி கிரெடிட் கார்டு!… டெல்லியில் 5 பேர் கைது!…

பிரபலங்களின் ஜிஎஸ்டி விவரங்கள் மூலம் போலி கிரெடிட் கார்டு தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 5 பேரை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, நடிகர்கள் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி தீட்சித், மற்றும் இம்ரான் ஹஷ்மி உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் மற்றும் பான் விவரங்கள் பயன்படுத்தப்பட்டு கிரெடிட் கார்டுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் 21.32 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், ஒரு வினோதமான இணைய மோசடி வழக்கில், மோசடி குழுவினர் பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பான் விவரங்களை, ஆன்லைனில் கிடைக்கும் ஜிஎஸ்டி அடையாள எண்களில் இருந்து வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தமுறை மோசடி குழு, பிரபலங்களின் பெயரில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது என டெல்லி துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) ஷஹாத்ரா ரோஹித் மீனா கூறினார்.

பிரபலங்களின் பெயரில் நடைபெறும் மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறிய கமிஷ்னர் ஷஹாத்ரா, போலிஸுக்கு கிடைத்த தகவலின்படி குற்றம் சாட்டப்பட்ட புனீத், முகமது ஆசிப், சுனில் குமார், பங்கஜ் மிஷார் மற்றும் விஸ்வ பாஸ்கர் ஷர்மா என 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி நபர் கூகுள்- இலிருந்து பிரபலங்களின் ஜிஎஸ்டி விவரங்களை பெற்று அதில் இருக்கும் பான் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு போலியான கிரெடிட் கார்டு பெற்றது தெரியவந்ததாகவும் டெல்லி துணை போலீஸ் கமிஷனர் கூறினார்.

Kokila

Next Post

சென்னையில் தல தோனி!... இன்றுமுதல் ஐபிஎல் தொடருக்கான பயிற்சி!... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!...

Sat Mar 4 , 2023
ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்த சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ம் தேதிவரை நடைபெறவுள்ளது. 10 அணிகள் பங்கேற்க உள்ள ஐபிஎல் போட்டியில், மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை – […]

You May Like