தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. மக்களுக்கு பலன் தரும் வகையில், பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், மேலும் மணமகன்/மணமகள் ஆடை, அரை சவரன் தங்கம், 20 பேருக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் அனைத்தும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.