fbpx

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்..! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இலவச சீருடை, இலவச கைப்பை, இலவச புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனோ தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 2021-2022 கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்கு அரசு ஆயத்தமாகி வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்..! திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்..!

இந்நிலையில், 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அனைத்து மாவட்ட மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு ஏற்கனவே சைக்கிள்களின் உதிரி பாகங்கள் வந்து இறங்கின. அங்கு சைக்கிள்களை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Chella

Next Post

’இனி ஆசிரியர்களின் வருகைப் பதிவு இப்படித்தான் இருக்கும்’..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி

Mon Jul 25 , 2022
அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணக்கர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்வதற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயலி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி […]

You May Like