புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் இனி இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பட்ஜெட்டில் அரசுப் பேருந்தில் பட்டியலின பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது, சட்டப்பேரவையில் புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் இனி இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேபோல், புதுச்சேரியில் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காரைக்காலில் சமீபத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.