fbpx

75 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச பேருந்து பயணம்..! மாநில அரசு அதிரடி அறிவிப்பு…

75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது..

மகாராஷ்டிராவில் முதியவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை 2 நாட்களுக்கு முன்பு அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் வெளியிட்டனர். இந்நிலையில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.. இந்த இலவச பயணம் ஆகஸ்ட் 26 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு முன் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தால், இலவச பயணத் திட்டத்தில் கட்டணம் திரும்பப் பெறப்படும்.

மேலும் 65 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பேருந்து டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.. ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற அடையாள ஆவணங்களைக் காண்பித்தால் இலவச பயண வசதியைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை..! யார் மீது சந்தேகம்..? ஆறுமுகசாமி பரபரப்பு பேட்டி

Sat Aug 27 , 2022
5 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த ஜெயலலிதாவின் மரணம் சார்ந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், தனது இறுதி விசாரணை அறிக்கையை முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி, ”விசாரணை ஆணையத்தை தொடரலாம் என்று அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கும், […]
”பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு”..! - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

You May Like