பெண்களுக்கான இலவசப் பேருந்து முழுவதையும் பிங்க் நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது.
பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தில் முன்புறம் மட்டும் பிங்க் (PINK) நிற பெயிண்ட் அடிக்கப்பட்டன. இந்த பிங்க் நிற பேருந்துகளின் சேவையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் தொடங்கி வைத்தார். பேருந்தில் முன்புறம் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த நிலையில், அது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில், பெண்களுக்கான இலவசப் பேருந்து முழுவதையும் பிங்க் நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மூன்று பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் அனைத்தும் 29 C Besent Nagar Route இல் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.