fbpx

அசத்தல் அறிவிப்பு…! குரூப் 2 தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு…!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இலவசமாக பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி-II பதவிகளுக்கான 507 காலிப்பணியிடங்களும் தொகுதி-IIA பதவிகளுக்கான 1820 காலிப்பணியிடங்களும் அடங்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் 08.07.2024 முதல் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

Free Coaching Class for Group 2 Exam

Vignesh

Next Post

மக்களே சூப்பர் குட் நியூஸ்..!! ஆவின் பால் பாக்கெட்டின் விலை அதிரடி குறைப்பு..!! வெளியான அறிவிப்பு..!!

Thu Jul 4 , 2024
The management of Aavin has informed that the price of 90 days non-perishable milk packets has been discounted by Rs.

You May Like