fbpx

வாவ்…! TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு…!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV-க்கான இலவச பயிற்சியில் சேர பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர். தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரியில் 04.12.2023 திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://tinyurl.com/2xmb4ts9 என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04342-296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

17 ஆப்களுக்கு ஆப்படித்த கூகுள்.! தடை செய்ய காரணம் இதுதான்.!

Sat Dec 9 , 2023
இன்றைய டிஜிட்டல் உலகில் மூன்று பில்லியன் பயனாளர்களுடன் மிகப்பெரிய ஆபரேட்டிங் சிஸ்டமாக விளங்கி வருவது ஆண்ட்ராய்டு. இந்த ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தப்படுகிறது. இந்த கூகுள் பிளே ஸ்டோர் 17 செயலிகளை அதிரடியாக அதன் ஸ்டோரில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருப்பது ஆண்ட்ராய்டு பயனர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கணினி நிபுணர்களால் ஸ்பைலோன் என அழைக்கப்படும் 17 செயலிகளை கூகுள் தனது […]

You May Like