fbpx

அசத்தல் அறிவிப்பு…! போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள்…!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 (TNPSC GROUP 1) தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 15.04.2024 அன்று முதல் செவ்வாய் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை மதியம் 2.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநில அளவிலான மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2.Passport size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

மேலும் http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்விணையதளத்தில் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம், மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி தேர்வினை ஆன்லைனில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வார இறுதி நாள்... சென்னையில் இருந்து 1,400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்...!

Fri May 31 , 2024
வார இறுதி மற்றும் முகூர்த்த நாட்களில் பயணிகள் சிரமமின்றி பயணிக்க வசதியாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், இன்று மற்றும் நாளை தினசரி 1,400 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன. கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலத்திற்கு வெள்ளிக்கிழமை 500 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை 570 பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடுவில் இருந்து ஒவ்வொரு […]

You May Like