fbpx

TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!

TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது .

மேற்படி போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 01- 01-2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 15.03.2023 முதல் 31.03.2023 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடேங்கப்பா!... உலகின் மிக உயரமான ATM இதுதான்!... என்னென்ன அம்சங்கள்!... எங்கே உள்ளது தெரியுமா?...

Wed Mar 15 , 2023
பாகிஸ்தானில் உள்ள பண இயந்திரம்தான் உலகின் மிக உயரமான ATM என்றழைக்கப்படுகிறது. இது 4693 மீட்டர் (15,396 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பண இயந்திரம் 4,693 மீட்டர் (15,396 அடி) உயரத்தில் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே வடக்கு பாகிஸ்தானில் உள்ள குஞ்சேரப் கணவாயில் அமைந்துள்ளது. இது சூரிய சக்தி மற்றும் காற்று விசையாழிகளால் இயக்கப்படுகிறது. 2016 இல் பாகிஸ்தானின் தேசிய வங்கியால் (NBP) […]

You May Like