fbpx

கவனம்…! குழந்தைகளுக்கு இலவச கல்வி… ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2024-25ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ எல்கேஜி வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ மாணவர் சேர்க்கைக்கு rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

Vignesh

Next Post

அதிர்ச்சி வீடியோ!! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்?

Mon May 20 , 2024
உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் இளைஞர் ஒருவர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.இதன் காரணமாக நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் […]

You May Like