fbpx

பெற்றோர்களே… மாணவர்களுக்கு இலவச கல்வி…! விண்ணப்பம் குறித்து முக்கிய அறிவிப்பு…!

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2024-25ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ எல்கேஜி வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல்‌ 3-வது வாரத்தில் இருந்து rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக்‌ கூடுதலாக விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளியில்‌ குலுக்கல்‌ முறை நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள்‌ தேர்வு செய்யப்படுவார்கள். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின்‌ பெயர்‌ பட்டியல்‌ விண்ணப்ப எண்ணுடண்‌ இணைய தளத்திலும்‌ சம்மந்தப்பட்ட பள்ளியின்‌ தகவல்‌ பலகையிலும்‌ வெளியிடப்படும்‌.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்கள் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

Vignesh

Next Post

வாய்ப்பும், பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜட்ஸ்மெண்ட்..!! சீரியல் நடிகை ஆர்த்திகா பகீர் தகவல்..!!

Thu Mar 28 , 2024
“வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” என்று சின்னத்திரை நடிகை ஆர்த்திகா கூறியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்திகா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவர் நடிப்புத் துறையில் வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதிரடியாக பதில் சொல்லி இருக்கிறார். “வாய்ப்பும், பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்மெண்ட் செய்ய வேண்டிய […]

You May Like