fbpx

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு செலுத்தும் கல்விக்கட்டணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது..

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ) 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.. இவ்வாறு சேர்க்கப்படும் மாணவ, மாணவிகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது.. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசு எவ்வளவு கட்டணம் செலுத்தி உள்ளது என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது..

அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் மாணவர் ஒருவருக்கு ரூ.12,076 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. மேலும் 6,7, மற்றும் 8-ம் வகுப்புகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.15711 என நிர்ணயம் செய்யப்பட்டது.. இந்த சட்டத்தின் கீழ் சேரும் மாணவ- மாணவிகளுக்கான கவ்லி கட்டணத்தை உயர்த்தி அளிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டை விட கட்டணத்தை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது..

Maha

Next Post

இடைவிடாத கனமழை.. பெங்களூருவில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுகு விடுமுறை..

Tue Aug 30 , 2022
கனமழை காரணமாக பெங்களூருவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகள் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் கர்நாடாவின் பல பகுதிகளிலும் நேற்று முன் தின முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது… இந்த கனமழை காரணமாக பெங்களூருவில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுட, பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதைத்தொடர்ந்து கர்நாடகாவின் பல […]

You May Like