fbpx

மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர்..!! ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன்..!! முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்..!!

கர்நாடகாவில் மே 10ஆம் தேதி அதாவது நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக தினமும் 1/2 லிட்டர் பால் பாக்கெட், 3 கேஸ் சிலிண்டர் இலவசம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச அரிசி இலவச மின்சாரம் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை போன்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து தற்போது தெலுங்கானாவில் 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர், இளைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தற்போது தெலுங்கானா காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்பிறகு தெலுங்கானா மாநில தனிப்பிரிவுக்காக போராடி உயிர் நீத்த இளைஞர்கள் தியாகிகளாக கருதப்படுவது, அவர்களின் பெற்றோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற அறிவிப்புகளையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’இந்த ஃபோட்டோவ பார்த்துட்டு எவனோ ட்ரோல் பண்றான்னு இருந்தேன்’..!! ரஜினியை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

Tue May 9 , 2023
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ படத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், அதை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இவருடைய கதாபாத்திரம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்று உற்சாகமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த போஸ்டரில் ரஜினியின் கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் சரமாரியாக பங்கம் […]
’இந்த ஃபோட்டோவ பார்த்துட்டு எவனோ ட்ரோல் பண்றான்னு இருந்தேன்’..!! ரஜினியை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

You May Like