தமிழ்நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன. இதில், விவசாயத்திற்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இலவச மின்சார திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 40,000 சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு திடீர் சர்ப்ரைஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தமானது 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தால் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது. அதனால், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் தர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு, விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதும் ஆங்காங்கே நடந்து வருவது, மின்வாரியத்தை கவலைக்குள்ளாக்கி வருகிறது. அதனால், இந்த முறைகேட்டை உடனடியாக தடுக்கவும், மின்வாரியம் முனைப்பு காட்டி உள்ளது. அந்தவகையில், முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் வாரியத் தலைவர் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறாராம்.
* அதாவது, அனைத்து குடிசை இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குடிசைக்காக மின் இணைப்பு பெற்று வீடு கட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரை 1 A விலைப் பட்டியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பழுதான மீட்டர்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும். பீடர்களில் மின்சாரத்தின் நிலை குறித்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
* அதிகளவு மின் இழப்பை ஏற்படுத்தும் பீடர்கள் குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். மின் இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மின்வாரிய அலுவலகங்களின் மின் பயன்பாட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும். இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவையை விரைந்து செலுத்த வேண்டும்.
* இதுபோன்று வருவாய் இழப்புக்கான முக்கிய காரணிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால்ம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வை பொறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது