fbpx

குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவசம்!… திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர், தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சந்நிதியை அடுத்து சுபதம் நுழைவாயில் வழியாக இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் புகழ்பெற்ற திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் 7, 8, 14 ,15 ஆகிய தேதிகளில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தான் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கான நடைமுறையை திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர், தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சந்நிதியை அடுத்து சுபதம் நுழைவாயில் வழியாக இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தரிசனத்துக்காக ஆதாா் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். பெற்றோா் மற்றும் குழந்தைகளின் உடன் பிறந்தவா்கள் அனுமதிக்கப்படுவா். அவா்களின் அனைவரின் ஆதாா் அட்டைகளையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். உடன் வரும் உறவினா்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள பக்தர்கள், நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவாயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் எனவும், மாதத்தில் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரிசனத்துக்கு டிக்கெட் அல்லது முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; சிறப்பு விழா நாள்கள், பக்தா்கள் கூட்டம் அதிகம் உள்ள நாள்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஒரே நாளில் ஹாட்ரிக் தங்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா!… ஸ்குவாஷ் வில்வித்தையில் அசத்திய வீரர், வீராங்கனைகள்!

Fri Oct 6 , 2023
19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. 12 வது நாளான நேற்று இந்தியா ஹாட்ரிக் தங்கங்களை வென்று அசத்தியது. நேற்றைய நிலவரப்படி 3 தங்கம் 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்று மொத்தம் 86 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 4 வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த விளையாட்டு திருவிழாவில், இந்தியா இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 […]

You May Like