fbpx

தமிழகமே…! வீட்டிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்…! அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்…!

வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை.

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.

இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கு என்று மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள் மற்றும் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.

வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பாத்ரூம் வீடியோவை லீக் செய்த முன்னாள் காதலன்! - இவ்வளவு கீழ்த்தரமானவரா..? பிரபல நடிகை ஆதங்கம்

Fri May 17 , 2024
குளியலறையின் தான் எடுத்த வீடியோவை, தனது முன்னாள் காதலர்தான் சமூகவலைதளங்களில் வெளியிட்டதாகவும், அவர் இவ்வளவு கீழ்த்தரமானவர் என்று தான் நினைக்கவில்லை என்றும், சர்ச்சைப்புகழ் நடிகை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டவர் நடிகை பூனம் பாண்டே. இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமானவர். சமூக வலைத்தளங்கள் மூலமாக இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். மாடலாகவும் நடிகையாகவும் பணியாற்றி வரும் இவர், 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை […]

You May Like