தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான முக.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.
ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் அணுகலாம். குறிப்பாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை ஆகியவற்றுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 98401 15857, 72992 64999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.