பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்வதுடன் இலவச சானிடரி நாப்கின்களை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளில் தேவையானோருக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெயா தாக்கூர் என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் சானிடரி நாப்கின்கள் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மாதவிடாய் கால சுகாதாரம் இல்லாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற காரணங்களால் பல மாணவிகள் பள்ளி படிப்பையை கைவிடும் நிலை உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனவே, பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்வதுடன் இலவச சானிடரி நாப்கின்களை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு ஜெயா தாக்கூர் தன் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விரைவில் வருகிறது.