fbpx

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி…!!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி முதல் 412 நீட் பயிற்சி மையங்களில் நேரடியாக பயிற்சி தொடங்குகின்றது.

தமிழ்நாட்டில் நீட் அமல்படுத்தப்பட்டவுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2017ம் ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 412 பயிற்சி மையங்கள்அமைக்கப்பட்டு அதன் மூலம் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.

20221-2022ம் கல்வியாண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன், மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர் ஆய்வகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கு அரசுப் பள்ளிகளில் படித்து கடந்த ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்கள் குறைந்தளவே தகுதிபெற்றனர்.

இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 412 மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு மீண்டும் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் 15,000 முதல் 20,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம்தேதி மாநிலம் முழுவதும் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. 11ம் வகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும், ஆதி திராவிடர்மற்றும் பழங்குடியினர் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை மட்டும் நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வேணடும் என பள்ளிக்கல்வித்துறை விதிமுறையில் தெரிவித்துள்ளது.

Next Post

ரஸ்னா நிறுவனர் காலமானார்...!!

Mon Nov 21 , 2022
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், ’ரஸ்னா’ என்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவரும் அதன்  தலைவருமான அரீஸ் பிரோஜ்ஷாவ் கம்பாட்டா காலமானார். 1970களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட குளிர்பானங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ரஸ்னா. மலிவு விலையில் கிடைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ’ரஸ்னா’வுக்கு அடிமை என்றே கூறலாம். தற்போது ரஸ்னா உலகம் முழுவதும் 60 நாடுகுளில் விற்கப்படுகின்றது. 80ஸ், 90ஸ்களில் ’ஐ லவ் யூ’ ரஸ்னா என […]

You May Like