fbpx

இந்திய விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்…..2024-ம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே வாக்குறுதி..வாக்குறுதி கொடுத்தது யார் தெரியுமா?

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ. இல்லாத அரசு உருவானால் இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று டி.ஆர்.எஸ். கட்சித்தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பேசினார், அவர் கூறுகையில் டெல்லியில் 2024ல் பா.ஜ. இல்லாத கொடி ஏற்றப்படும். விவசாயிகளை விரட்டும், பாமரர்களை எதிர்க்கும், தொழிலாளர்களை எதிர்க்கும் இந்த பா.ஜ. அரசு விரட்டப்பட வேண்டும். அவ்வாறு மக்களவைத் தேர்தலில் நடக்கும் பட்சத்தில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். ’’ என்றார். இதை கூறி முடித்ததுமே மக்கள் கை தட்டி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

’’உங்கள் ஆசீர்வாதத்தில் நான் தேசிய அரசியலில் பங்கேற்கலாமா? ’’ என பொதுமக்களைப் பார்த்து கேட்டார் .  ’’ ஆமாம், நீங்கள் போட்டியிட வேண்டும்? என ஒரே குரலில் மக்கள் பதிலளித்தனர். ’’ மோடி தனது நண்பர்களின் ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை தள்ளுபடி செய்தார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கு ரூ.20.8 சதவீதம் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றார்கள். இதற்கு ஆகும். செலவு ரூ.1.45 லட்சம் கோடி மட்டுமே . இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது குறைவுதான். ஒருவேளை அவர் இலவச மின்சாரம் வழங்கி இருந்தால் விவசாயிகள் பயனடைந்திருப்பார்கள்.’’ என்றார்.

’’ விமான நிலையங்களை விற்றார், விமானங்களை தாரைவார்த்தார், ரயில்வேயை தனியாருக்கு விற்றார், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை விற்பனை செய்தார். இப்போது அவர் விவசாயிகளை பிரச்சனைக்குள் சிக்க வைத்து யூரியா, டீசல் உள்ளிட்ட விலையை ஏற்றி விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கபோகின்றார். விவசாய பம்ப்செட்டுகளுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என வற்புறுத்துகின்றார். இப்போது அவருக்கு நீங்கள் மீட்டர் பொருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. ’’ விவசாயிகளை நலிவடையச் செய்யும் திட்டம் தீட்டப்பட்டு , பிரதமருடன் தொடர்புடைய கார்பரேட் தொழிலதிபர்கள் மற்றும் நண்பர்களுடன் விவசாய நிலங்களை கையகப்படுத்த வழிவகை செய்யப்படுகின்றது. அதற்கு பின்னர் அவர்கள் விவசாயிகளை கூலி வேலை செய்ய வேண்டும் என்பார்கள்.’’  என சாடினார்.

Next Post

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாளை மோதுகின்றது... முதல் ஒரு நாள் போட்டியில் எதிர்கொள்கின்றது..

Mon Sep 5 , 2022
 ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நாளை மோதுகின்றது. நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவில் ஆயத்தமாகி வருகின்றது. இப்பேர்டி கெய்ரன்சியில் கஸாலி ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றது. யார் யார் போட்டியில் உள்ளனர் நியூசிலாந்து வீரர்கள் பட்டியல் மார்டின் கப்தில் , பின் ஆலென் , கேன் வில்லியம்ஸ் , டாம் லதாம் , டேரில் மிட்செல் , கிளென் […]

You May Like