அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்களை வாங்குபவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் உடனடியாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக அரிசி, கோதுமை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. சிலர் அவற்றை வாங்குவதில்லை. அதனால், அந்த பொருட்கள் ரேஷன் கடைக்காரர்கள் மூலமாக வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.
இதனால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் உடனடியாக இணைக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டால் அரசுக்கு இந்த வகையில் ஏற்படும் இழப்பு சரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு குறிப்பிட்ட அளவு நிதிச் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.