நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயளார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனாவால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக மத்திய அரசு வழங்கி வருகின்றது. ஊரடங்கு காலக்கட்டத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலையில் பெரும்பாலான மக்கள் இத்திட்டத்தில் பயனடைந்தனர். இதில் 80 கோடி பேர் நாடு முழுவதும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றார்கள். அரிசி உள்பட 5 கிலோ தானியங்களும் இத்திட்டத்தில் வழங்கப்பட்டது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் பல முறை நீட்டிக்கப்பட்டது. வரும் 30 ம் தேதிவரை கடந்த முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு தொடர்ந்து இலவச உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால்மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இலவச ரேஷன் திட்டமான கரிஃப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இத்திட்டம் டிசம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போல் 5 கிலோ புழுங்கல் அரிசி உள்ளிட்ட இலவச பொருட்களை மக்கள் தொடர்ந்து பெறலாம்.