fbpx

3 மாதத்திற்கு இலவச ரீசார்ஜ்..!! உங்கள் வாட்ஸ் அப்புக்கும் வந்துருக்கா..? மக்களே உஷாரா இருங்க..!!

பண்டிகை காலங்கள், தேர்தல் நேரங்களை குறிவைத்து மக்களிடம் பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அரசியலைப் பொறுத்தவரை தற்போது 2024இல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் விறுவிறுப்புடன் மக்களை நேரில் சந்தித்து தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வரும் நிலையில், மோசடி செயலில் ஈடுபடும் கும்பல் இதனை தனக்கான சாதகமான வாய்ப்பாக பயன்படுத்தி மோசடிகளை தொடருகின்றன.

அரசியல் கட்சிகள் உங்களுக்கு இலவசமாக ரீசார்ஜ் மற்றும் டேட்டா போன்ற சேவையை வழங்குகிறது எனக்கூறி போலியான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரவவிட்டு, அதன் மூலமாக பயனரின் தனிப்பட்ட தகவல் அல்லது வங்கிக் கணக்கில் உள்ள பணம் ஆகியவற்றை திருடி கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.

இது தொடர்பான வாட்ஸ் அப் பதிவு வைரலாகி வரும் நிலையில், மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவரம் அறியாமல் லிங்கை தொட்டால், நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும். தற்போது காங்கிரஸ் சார்பில், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு இலவச டேட்டா வசதியை கொடுக்கிறது என லிங்க் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இது மோசடிக்கான ஆசை வலைவிரிப்பு செயல் ஆகும்.

அதேபோல, நமது வங்கி கணக்கில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படும். யாரேனும் இவ்வாறான சூழ்நிலை எதிர்கொண்டு பணத்தை இழந்தால், பணத்தை இழந்த 24 மணி நேரத்திற்குள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், நமது பணம் மீட்டுக் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல, இது போன்ற லிங்குகள் உங்களின் வாட்ஸ் அப்பில் உலாவினால், அதனை கண்டு கொள்ளாமல் விடுவது அல்லது புகார் அளிப்பது நல்லது.

Chella

Next Post

பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம்..!! நீங்களும் பார்க்கலாம்..!! விஞ்ஞானிகள் சொன்ன தகவல்..!!

Mon Nov 13 , 2023
அடுத்தாண்டு ஜூன் 2ஆம் தேதி வால்நட்சத்திரம் ஒன்று பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளதாகவும், இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இதை வெறும் கண்களால், பைனாகுலரில் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால்நட்சத்திரம் முதலில் 1812ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் லுாயிஸ் பான்ஸ்சால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1883ஆம் ஆண்டு அமெரிக்காவின் வில்லியம் ராபர்ட் ப்ரூக்ஸ்சால் மீண்டும் கண்டறியப்பட்டது. இதற்கு […]

You May Like