fbpx

ராமர் கோவிலில் பெண் பக்தர்களுக்கு இலவச சிறப்பு பரிசு!… என்ன தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை தரிசிக்க ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை புரிவர். கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி அன்று 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அடுத்த நாளில் இருந்து வருகை புரிந்து தரிசிக்கலாம். எனவே லட்சக்கணக்கில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் வளையல்கள், பிரேஸ்லெட்கள் பரிசாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, இலவசமாக வளையல்கள், பிரேஸ்லெட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாட்டை ஃபிரோசாபாத்தை சேர்ந்த வர்த்தகர்கள் செய்துள்ளனர். பரிசாக அளிக்கப்படும் வளையல் மற்றும் பிரேஸ்லெட்டில் ராமர், சீதா, ஹனுமன் ஆகியோரின் உருவங்கள் பதிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. 4 அல்லது 5 வளையல்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டது போல உருவாக்கியுள்ளனர். இதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஃபிரோசாபாத் வர்த்தகர் ஆனந்த் அகர்வால் கோரிக்கை விடுத்துள்ளார். உடனே அனுமதியும் கிடைத்துள்ளது. இதையடுத்து அயோத்தி நகரின் முக்கியமான இடங்களில் கடைகளை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் தங்களது இலக்காக 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையை ஃபிரோசாபாத் வர்த்தகர் ஆனந்த் அகர்வால் மற்றும் அவரது மகன் நிஷாங்க் அகர்வால் ஆகியோர் வைத்திருக்கின்றனர். அதன்படி 10 ஆயிரம் பெண் பக்தர்களுக்கு இலவசமாக வளையல்கள், பிரேஸ்லெட்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் ராம ஜென்மபூமி இயக்கத்தில் கரசேவகராக இணைந்து பணியாற்றியவர் தான் ஆனந்த் அகர்வால். சில முறை சிறைக்கும் சென்றிருக்கிறார்.

எனவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக இவரது குடும்பத்தினரின் பங்கு இருக்கிறது. இந்நிலையில் அகர்வாலின் முயற்சி பலரது கவனத்தை பெற்றுள்ளது. வளையல் வியாபாரம் செய்யும் பலர், வளையல்களில் ராமர், சீதா, ஹனுமன் ஆகியோரின் படங்களை பொறித்து விற்பனை செய்ய ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

Kokila

Next Post

’யாருக்கு உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’..!! ’கேப்டன் வீடு திறந்தே இருக்கிறது’..!! பிரேமலதா உருக்கமான வீடியோ..!!

Sat Jan 20 , 2024
விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால், நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத பிரேமலதா விஜயகாந்த், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், […]

You May Like