சேலம் மாவட்டத்தில் கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் 15.09.2024 அன்று நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளினை முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்தும் கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் சேலம் மாவட்டத்தில் 15.09.2024 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை மேச்சேரி பகுதியில் VGP மஹாலில் நடைபெறுகிறது.
மேற்கண்ட மருத்துவ முகாமில் இருதய நோய் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த அழுத்தம் போன்ற பொது மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பொதுசுகாதாரம், மகளிர் சுகாதாரம் மற்றும் வருமுன் காப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். எனவே, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் நெசவாளர்கள், நெசவு சார்ந்த உபதொழில் புரிபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் நெசவாளர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.