fbpx

இலவச பயணச்சீட்டு..!! ஆன்லைனில் பெறுவது எப்படி..? பயணிகளே நோட் பண்ணிக்கோங்க..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இ-சேவை மூலம் கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்களுக்கு இலவச பயணச்சீட்டு, அலுவலகம் செல்வோருக்கான கட்டண சலுகை அனுமதி சீட்டு, மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் பயணம் மேற்கொள்ள கட்டணமில்லா பயண அட்டைகள் தற்போது வழங்கப்படுகிறது.

ஆனால், இதனை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கவும், புதிய பேருந்து பாஸ்களை பெறவும், நீண்ட வரிசையில் காத்திருந்து பெற வேண்டிய கடினமான நிலைமை உள்ளது. இப்படி ஒரு அவதியை தடுப்பதற்காகத்தான், இந்த கட்டணமில்லா மற்றும் சலுகை பயணசீட்டுகளை வெப்சைட் மூலமே இனி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினை, பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இந்த வசதியானது செயல்படுத்தப்பட்டுள்ளது. இனி, கட்டணமில்லா பயணச் சீட்டுகளை பெற விரும்பும் தகுதியுடையோர் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது tn.e.sevai இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

* https://mtcbus.tn.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல வேண்டும்.

* அதில், CONCESSION FARES-என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

* மாணவர்கள், பத்திரிகையாளர்கள், மாற்று திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழரறிஞர்கள், வயது முதிர்ந்தவர்கள் என தனித்தனி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தேவையான விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்

* தங்கள் விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை மறுபடியும் அதே வெப்சைட்டில் அப்லோடு செய்ய வேண்டும். இதற்கு தரப்படும் ரசீனை பெற்று கொண்டு, பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும்.

* பிறகு, பயனாளியின் செல்போனுக்கு மெசேஜ் வந்துவிடும். இந்த பயணச்சீட்டு அட்டையை டவுன்லோடு செய்து இலவச பயணத்தை பயணிகள் மேற்கொள்ளலாம்.

Chella

Next Post

மாஸ்க் கேட்ட நிக்சன்..!! உள்ளாடையை எடுத்து நீட்டிய மாயா..!! இது மட்டும் சரியா..? கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!

Sun Oct 8 , 2023
கூல் சுரேஷ் குறுகுறுவென தன்னை காமப் பார்வையுடன் பார்க்கிறார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மாயா, நிக்சன் பிக்பாஸ் வீட்டை சுத்தம் செய்யும் போது, மாஸ்க் கேட்க உடனடியாக அந்த பொருளை எடுத்துக் காட்டி சிரித்த காட்சிகள் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளன. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர ஆரம்பித்துள்ளது. அந்தளவுக்கு இந்த சீசனில் உள்ளே சென்றுள்ள இளம் போட்டியாளர்கள் முதல் வயதான போட்டியாளர்கள் […]

You May Like