மத்திய அரசின் UIDAI ஜூன் 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஆதார் அப்டேட்களை இலவசமாக செய்யலாம் என அறிவித்துள்ளது. அதாவது, ஆன்லைனில் மட்டும் இலவசமாக செய்யப்படும். இ-சேவை மையங்கள், தபால் நிலையங்களில் செய்வதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆதார் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உங்களது அருகில் இருக்கும் ஆதார் மையம், தபால் நிலையம், இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். பின் ஆதார் Enrolment/ அப்டேட் விண்ணப்பத்தினை பெற்று நிரப்பவும். அதனை ஆதார் மைய நிர்வாகியிடம் கொடுத்து உங்களின் ஆதார் விவரங்களை சொல்ல வேண்டும். தற்போது உங்களது பயோமெட்ரிக் டேட்டா கைரேகை (அ) கண் ஸ்கேன் செய்யப்படும். அதன்பின் ஆதார் மைய நிர்வாகி உங்களது ஆதார் விவரங்களை சரிபார்த்து UIDAI தளத்தில் அப்டேட் செய்வார். இதற்கு சேவை கட்டணம் ஆக ரூ.50 வசூலிக்கப்படும். ஏராளமான ஆதார் அப்டேட் சேவைகள் ஆதார் மையம், தபால் நிலையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. சிறிய அளவிலான சேவைகள் மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும்.