fbpx

விருதுநகரில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்; வரும் இருபதாம் தேதி தொடங்குகிறது..!.

விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி முகாம் வரும் 20-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக்காவலர் ( ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,552 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கல்வித்தகுதி – குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு – வயது உச்ச வரம்பு 31 (வயது தளர்வு உண்டு), விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.08.22. இதுபற்றி மேலும் விவரங்களை www.tnusrb.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக, தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக வரும் 20ஆம் தேதி முதல் நேரடியாக நடைபெற உள்ளது.

மேற்காணும் தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் onlineclassvnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். வகுப்புகளின் விவரங்களை https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாக தெரிந்து கொண்டு பயனடையுமாறு, ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

பெண்களுக்கு ஒரு இனிப்பான செய்தி மாதவிடாய் காலங்களில் இதை சாப்பிட்டா வலி பறந்தே போய்விடும்...!

Mon Jul 18 , 2022
பெண்களுக்கு மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும் நிகழ்வாகும். பூப்படைந்த நாட்களில் இருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் நிலைக்கு தகுந்தவாறு மாற்றங்கள் இருக்கும். மாதவிடாய் நாட்களில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் மன அழுத்தம், கோபம், எரிச்சல், சோகம் போன்ற உணர்வுகள் உண்டாகும். அந்த சமயங்களில் ‘கார்டிசோல்’ எனும் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். மாதவிடாய் நாட்கள் என்பது பல பெண்களுக்கு மிகவும் நெருக்கடியான […]

You May Like