fbpx

Tnpsc போட்டித்‌ தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள்‌…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.‌‌..!

தருமபுரி மாவட்டத்தில்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ TNPSC Field Surveyor cum Assistant Draughtsman2022 தேர்விற்கான 1089 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு 23.09.2022 அன்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ காலை 10 மணி முதல்‌ வகுப்புகள்‌ துவங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ https://cutt ly/GCVWxWm என்ற Google படிவத்தில்‌ விண்ணப்பிக்கவும்‌. மேலும்‌ விவரங்களுக்கு தொலைபேசி எண்‌ 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌. TNPSC Field Surveyor cum assistant draughtsman2022 2022 போட்டித்‌ தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சந்திரமுகி படத்தில் இருந்த 30 அடி நீள பாம்புக்கு என்ன ஆனது..? பல ஆண்டுகளுக்கு பிறகு பி.வாசு விளக்கம்...

Wed Sep 21 , 2022
பி. வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாபா படத்தின் தோல்விக்கு ரஜினியின் கெரியரே முடிந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.. லைகா நிறுவனம் சந்திரமுகி 2 படத்தை தயாரித்து வருகிறது.. நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இப்படத்தை இயக்கி வருகிறார்.. அனுஷ்கா ஷெட்டி, வடிவேலு ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.. இந்நிலையில் அந்த […]

You May Like