fbpx

அரசு பேருந்தில் காவலர்களுக்கு இலவச பயணம்…! 2021-ல் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

கடந்த 2021 – 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் பொழுது அரசு பேருந்துகளில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து இலவச பயணம் செய்யலாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை செயல்படுத்தாதது ஏன் என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.

தமிழக காவல் துறையில் டிஜிபி தலைமையில் சட்டம் , ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பிக்கள், டிஎஸ்பி, ஆய்வாளர்கள், காவலர்கள் என, சுமார் 1,21,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த 2021 – 2022 மானியக் கோரிக்கையின் போது, அவர்கள் எதிர்பார்த்த வகையில் சுமார் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்டார். அதில் முக்கியமாக அரசு பேருந்துகளில் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பணி செய்யும் மாவட்டத்திற்குள் தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து இலவச பயணம், இதற்காக நவீன அட்டை அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார். இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; கடந்த 2021 – 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அறிவித்துள்ள நிலையில், காவலர் திரு. ஆறுமுகப்பாண்டி அவர்களை, இது போன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்..? முதலமைச்சரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்துக்காக, காவலர் திரு. ஆறுமுகப்பாண்டி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

’Goat’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்..!! அமெரிக்கா to சென்னை..!! விஜய்யின் அடுத்த பிளான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Wed May 22 , 2024
Vijay, who had gone to America for the graphics work of Code, is now back in Chennai.

You May Like