புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். ரவிசங்கர் தெரிவித்துள்ளார்..
சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, ஆலோசனை பணிக்கு அண்மையில் டெண்டர் விடப்பட்டது.. இதற்கு தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.. இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. அப்போது, ஜிசிசி முறையில், பேருந்து இயக்கத்தை ரத்து செய்தல், போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குதல் அகவிலைப்படி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்..
இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், ஜிசிசி முறையில், மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து, ஒப்படந்த அடிப்படையில் மாநகர போக்குவரத்து கழக வழித்தடங்களில் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைக்கு மட்டுமே ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. மெலும் 500 புதிய மின்சார பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்..” என்று தெரிவித்தார்..