40 புதிய தனியார் மருத்துவமனைகள், நோயறிதல் மையங்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் CGHS வழிகாட்டுதல்களுடன் விகிதங்களை சீரமைப்பதன் மூலம் ECHS தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) என இரண்டு மருத்துவ திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த மே 24,2024 அன்று மத்திய அரசு ECHS என்ற முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் 40 தனியார் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் நோயறிதல் மையங்களை சேர்த்துள்ளது.
மேலும், இந்த செயல்முறை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு இலவச சேவைகள் மற்றும் சிகிச்சைகள் அங்கீகரிக்கப்பட்ட CGHS குழுவுடன் இணைந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ரூ.59,000-ஐ நெருங்க காத்திருக்கும் தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?