fbpx

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களை பழுதுநீக்க உதவி எண்கள்!…

வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுநீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில் உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையை புரட்டிபோட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்புகள் இன்னமும் அடங்கவில்லை. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து நிவாரண பணிகளிலும், மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எமஎல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. எனினும், மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.

இதனால், வீடுகளில் இருந்த உடமைகள், பைக்குகள், கார்கள், மழைவெள்ளத்தில் மூழ்கி பழுதடைந்தன… இதனால் வெள்ளம் வடிந்துவரும் நிலையில், பல வாகனங்கள் இயங்கவில்லை.. எனவே, அவைகளை பழுது பார்த்து சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பழுது பார்க்கும் இடங்களில் கூட்டம் கூடிவருகிறது.. பழுது பார்க்கும் மெக்கானிக்குகள், பழுதுபார்ப்பவர்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை சரிசெய்ய தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராயல் என்ஃபீல்டு வண்டிக்கு 1800 2100 007 என்ற எண், யமஹா வண்டிக்கு 1800 4201 600 என்ற எண் என தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது… டிவிஎஸ் வாகனத்துக்கு 1800 2587 555 என்ற எண், ஹோண்டா வாகனத்துக்கு 1800 1033 434 என்ற எண், சுசுகி வாகனத்துக்கு 1800 1033 434 என்ற எண் என்று தமிழக அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கார்களை பொறுத்தவரை, மாருதி சுசுகி வாகனத்துக்கு பழுது பார்க்க 1800 1800 180 என்ற எண், லன்சன் டொயோட்டோ வாகனத்துக்குப் பழுது பார்க்க 1800 1020 909 என்ற எண், 1800 2090 909 என்ற எண்கள் பழுது பார்ப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் கியா மோட்டார்ஸ் வாகனத்துக்கு 1800 1085 000 என்ற எண்ணும்; ஹூண்டாய் வாகனத்துக்கு 1800 1024 645 என்ற எண்ணும் பழுது பார்ப்பதற்காக தரப்பட்டுள்ளது. மேலும் டாடா மோட்டார்ஸ் வாகனத்துக்கு 1800 209 8282 என்ற எண்ணும், டொயோட்டோ வாகனத்துக்கு 1800 102 50001 என்ற எண்ணும் பழுது பார்ப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் செய்திக்குறிப்பு ஒன்றையும் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறார். அதில், “வாகன தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய வாகனங்களை இயக்காமல் மீட்பு வாகனங்கள் மூலம் சர்வீஸ்சென்டர்களுக்கு எடுத்து வருமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. வாகனத் தயாரிப்பு, காப்பீடு நிறுவனங்கள் சார்பில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வாகன பழுதுநீக்கம் செய்யும் பொருட்டு, பிற மாவட்டங்களில் இருந்து தொழில்நுட்பப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உதிரி பாகங்களைக் கொண்டு வரவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரூ.20 ஆயிரத்துக்கு குறைவான பாதிப்புள்ள வாகனங்களுக்கு காப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. சர்வீஸ் சென்டர்களில் காப்பீட்டு நிறுவன ப்பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்றுகின்றனர். வாகனங்களை சர்வீஸ் சென்டர்களுக்கு கட்டணமின்றி மீட்பு வாகனங்கள் மூலம் எடுத்து வருவதற்கான நடவடிக்கையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நேற்று முன்தினம் வரை 3,433 வாகனங்கள் பழுது நீக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மீட்புப் பணிக்காக கூடுதல் வாகனங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழுதுநீக்கம் தொடர்பாக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகள் tnsta என்ற போக்குவரத்துத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பழுதுநீக்கம், காப்பீடு தொடர்பான முகாம் நடத்துவதற்கான இடங்களை வழங்கவும் அரசு தயாராக உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது” என்று கூறப்பட்டுள்ளது.

Kokila

Next Post

2024 ஐபிஎல் ஏலம்!… வீரர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!

Tue Dec 12 , 2023
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை மினி அளவில் வெறும் ஒரு நாள் மட்டுமே நடைபெற உள்ள ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை மும்பை வாங்கியது போல் சில அணிகள் டிரேடிங் முறையில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி இறுதிக்கட்ட பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. அதைத் தொடர்ந்து 2024 ஏலத்திற்காக உலகம் முழுவதிலும் விண்ணப்பங்களை ஐபிஎல் நிர்வாகம் வரவேற்றது. அதில் […]

You May Like