வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் மோகன்தாஸ் (23). இவர் தற்போது அசாம் மாநிலத்தில் ராணுவ பயிற்சியில் உள்ளார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது சிறுமியுடன் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். இதற்கிடையே, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், ராணுவ பயிற்சிக்காக அசாம் மாநிலத்துக்கு மோகன்தாஸ் சென்றுவிட்டார். இதற்கிடையே, அந்த சிறுமியின் உடல்நலம் திடீரென பாதிக்கப்பட்டது. மேலும், தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி த்னது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது ராணுவ வீரர் மோகன்தாஸ் உடனான காதல் விவகாரத்தையும், நெருங்கி பழகியதையும் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் மகளிர் போலீசார் ராணுவ வீரர் மோகன்தாஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.