fbpx

அடிக்கடி தலைவலி வருகிறதா?… நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்!… எச்சரிக்கை!

நுரையீரல் என்பது மார்பில் உள்ள இரண்டு பஞ்சு போன்ற உறுப்புகள். சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துகொள்ளும் உறுப்பும் இதுதான், மேலும் உடலில் இருந்து கார்பன் டை- ஆக்ஸைடை வெளியிடுகின்றன.நுரையீரல் புற்றுநோய் என்பது உங்கள் நுரையீரலில் கட்டுப்பாடற்ற செல் பிரிவினால் ஏற்படும் ஒரு நோய். இந்நிலையில் உங்கள் செல்கள் பிரிக்கப்பட்டு அதன் இயல்பான செயல்பாட்டின் ஒரு பகுதியாக அதிகமான நகல்களை அங்கு உருவாக்குகின்றன. இதனால் அவை அதிகமாக உருவாக்கி கொள்கிறது. இந்த சேதமடைந்த செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து கட்டிகளாக உருவாகின்றன. படிப்படியாக நுரையீரல் உறுப்புகளை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றன.

உடல் எடை குறைவது நுரையீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.நாள்பட்ட இருமல் இருக்கலாம். இருமலின் போது, சளியின் போது இரத்தம் வரலாம். மூச்சுவிடுதலில் சிரமம் இருக்கலாம். தலைச்சுற்றல் ( புற்றுநோய் மற்ற இடங்களுக்கு பரவும் போது மூளைக்கும் பரவும் போது தலைச்சுற்றல், கடுமையான தலைவலி, வலிப்புகள் போன்றவை வரலாம்). அறிகுறிகள் கண்டதும் சிடி ஸ்கேன் அல்லது (chest X-ray) மார்பு எக்ஸ்ரே எடுக்க வேண்டும். இதில் ஓரளவு முடிவு வரும் என்றாலும் இது இறுதி முடிவு அல்ல. கூடுதலாக PET/CT பரிசோதனை செய்யப்படும். இது இரண்டு வகைகளில் உதவலாம். இந்த பரிசோதனையில் உடலில் எந்த இடங்களில் பரவி உள்ளது என்பதை கண்டறிந்துவிட முடியும். இது பாதுகாப்பான முறை தான். இம்முறையில் கண்டறிந்தாலும் இதை மட்டும் கொண்டு சிகிச்சை அளிக்க முடியாது.

நுரையீரல் புற்றுநோய் தவிர்ப்பது எப்படி? காற்று மாசு, இராசயன மாசு, தொழிற்சாலைகளில் இருப்பவர்கள் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். புகைமூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் குழந்தைகளை விளையாட விடுவதோ, உடற்பயிற்சி செய்வதோ கூடாது. தற்போது வாகன புகையால் உண்டாகும் காற்று மாசு படுவதை தடுக்க நவீன பேட்டரி வாகனங்கள் பெரு நகரங்களில் மெட்ரோ போன்றவை வருவது மாசுவால் நுரையீரல் பாதிப்பை தடுக்க உதவும். புகைப்பழக்கம் மிக மிக மோசமானது அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பவர்களோடு அருகில் அதை சுவாசிப்பவர்களுக்கும் அந்த ஆபத்து அதிகம் என்பதால் இதை தவிர்ப்பது பாதுகாப்பானது.

Kokila

Next Post

கல்லூரி மாணவியை மிரட்டி சீரழித்த இளைஞன்….! சமூக வலைதளத்தால் ஏற்பட்ட விபரீதம்…..!

Wed Aug 2 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு கல்லூரி மாணவி சில தினங்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில் ஒரு புகார் வழங்கினார். அந்த புகாரில் ஆன்டி ஜார்ஜ் என்பவர் தன்னுடன் சமூக வலைதளங்களில் நட்பாக பழகி பின் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த புகார் மனுவில் அந்த மாணவி குறிப்பிட்டு இருக்கிறார்.அதன் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, அந்த இளைஞரையும் வேறு சில நபர்களையும் கைது செய்து இருக்கிறார்கள். அதன் பிறகு […]

You May Like