fbpx

நண்பன் மறைவு..!! மனமுடைந்துபோன ரஜினி..!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் உட்பட சில தமிழ் படங்களையும், ஏராளமான கன்னட படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் துவாரகீஷ் மறைவை அடுத்து, அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் துவாரகீஷ் காலமானார். கடந்த 1966இல் இருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார். ரஜினிகாந்த் நடித்த ’அடுத்த வாரிசு’ மற்றும் ’நான் அடிமை இல்லை’ ஆகிய இரண்டு தமிழ் படங்கள் உட்பட சில தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார். மேலும், ஏராளமான கன்னட படங்களில் நடித்த இவர், ஆரம்ப காலகட்டத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி முக்கிய வேடத்தில் நடித்த பின்னர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக உயர்ந்தார்.

இந்நிலையில், பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள தனது வீட்டில் துவாரகீஷ் காலமானதாக அவரது மகள் அறிவித்துள்ளார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ”எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷ் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடன் பழகிய இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! அஞ்சல் துறையில் சூப்பர் திட்டம்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?

Chella

Next Post

"அண்ணாமலை போன்ற அறிவாளியா நடிகர் விஜய்.?"… நடிகை ஆர்த்தி சர்ச்சை பேட்டி.!!

Tue Apr 16 , 2024
மலையாளத்தில் குழந்தையின் நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஆர்த்தி. தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானார். தனுஷ் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் இவர் நடித்த திருக்காணி கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் விஜய் விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களிலும் கதாநாயகிகளுக்கு தோழி மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் […]

You May Like