fbpx

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்கு ‘ரெண்டு பசங்க’ கூட்டு…! பிரதமர் மோடி தாக்கு

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக ‘ரெண்டு பசங்க’ கூட்டு சேர்ந்துள்ளனர் – ’ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ்’ கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.

ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி-அகிலேஷ் யாதவ் கூட்டணி தாஜா அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். ஓபிசி ஒதுக்கீட்டை காங்கிரஸ் திருடியதாகவும், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ் ‘ரெண்டு பசங்க’ கூட்டு சேர்ந்துள்ளனர் என்றார்.

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல் கொள்கை நாட்டை பிளவுபடுத்தும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக்கின் அடையாளங்கள் இருப்பதாக கூறினார். சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல் நாட்டின் நேர்மையான மக்களின் உரிமையைப் பறித்துவிட்டது. “எங்கள் நாடு பல திருப்திகரமான அரசியலைக் கண்டுள்ளது, அது நாட்டை துண்டு துண்டாகப் பிரித்துள்ளது. தாஜா அரசியல் உண்மை மற்றும் நேர்மையானவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது.

Vignesh

Next Post

13 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில் - இன்றுமுதல் 3 நாட்களுக்கு அலர்ட்

Fri Apr 26 , 2024
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளிய செல்லவே பயப்படுகின்றனர். அந்த அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது.தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதே போல, திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கரூர் […]

You May Like