fbpx

சிறையில் நட்பு..!! அடிக்கடி வீட்டுக்கு வந்த நண்பன்..!! நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த மனைவி..!! நடந்தது என்ன..?

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கால்நடைகளை மேய்க்க சென்றுள்ளனர். அப்போது, ​​முகம் சிதைந்த நிலையில் மறைவான இடத்தில் இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்த பெண் முகம் சிதைந்த நிலையில் நிர்வாணமாக கிடந்தார். இதனால், கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அவர் கையில் வரைந்திருந்த ‘டாட்டூ’வை வைத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த நசீர் என்பவரின் மனைவி கரிமுனிஷா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, எஸ்பி வித்யாசாகர் தலைமையிலான போலீசார் கரிமுனிஷாவை கொன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், கரிமுனிஷாவின் கணவர் நசீர் ஒரு வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் சிறையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

சில நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த பாஸ்கர், நசீரை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கரிம்முனிஷா இறந்து கிடந்த நிலையில் பாஸ்கர் திடீரென மாயமானார். எனவே, இந்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்கரை கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read More : ”உடற்பயிற்சியே செய்தாலும் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இதயநோய் வரும்”..!! புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Bhaskar, who was released from prison a few days later, has often visited Nazir’s house to meet him.

Chella

Next Post

குளிர்காலத்தில் இதை மட்டும் மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.. பல பிரச்சனைகளை தடுக்கலாம்..!

Sat Nov 23 , 2024
Let's now look at the benefits of eating peanuts in winter.

You May Like