fbpx

பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை ஆவினில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கமான ஆவினில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கடந்த எட்டாம் தேதி வெளியாக இருக்கின்றன இந்த அறிவிப்புகளின் படி ஆவின் பால் நிறுவனத்தில் 322 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேனேஜர் உதவி மேனேஜர் தொழிற்சாலை உதவியாளர் பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 322 இடங்களுக்கான அறிவிப்பை கடந்த எட்டாம் தேதி தமிழ்நாடு பார் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமான ஆவின் வெளியிட்டுள்ளது.

இந்தப் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகியவை ஆவின் பாலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு களுக்கான அடிப்படை கல்வி தகுதியாக பிளஸ் 2 டிகிரி மற்றும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி ஆகியவை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் அதற்கான பணிகளில் விண்ணப்பிக்கலாம். அறிவிக்கப்பட்டுள்ள 322 காலியிடங்களுக்கு பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பிளஸ் 2 டிகிரி மற்றும் பொறியியல் படிப்பு ஆகியவற்றிற்கான காலியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் பற்றி அந்த இணையதளத்தில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போர் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அதன் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப நிபுணர், நீட்டிப்பு அதிகாரி, நிர்வாக.தனியார் செயலாளர். இளைய செயலாளர், மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 322 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்காக விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக ஆவின் அறிவித்திருக்கிறது. மேலும் தேர்வுக்கான தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் இந்தப் பணிக்கான ஊதியம் மற்றும் வயதுவரம்பு போன்ற தகவல்கள் விரைவில் பதிவேற்றப்படும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை பற்றி மேலதிக விபரங்களை அறிய tn.gov.in என்ற முகவரியில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Baskar

Next Post

ஏலியன்களா..? அமெரிக்கா சுட்டு வீழ்த்திய மர்ம பொருட்கள்.. ராணுவ அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Tue Feb 14 , 2023
இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்திலோ அல்லது வேற்று கிரகத்திலோ வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை யாரிடமும் இல்லை. எனவே ஏலியன் தொடர்பான மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன.. இந்நிலையில் […]

You May Like