தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் ஜூன் மாதம் 7ம் தேதி பள்ளி திறப்பை தள்ளி வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது, அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் மாதம் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று மறுபடியும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு இரண்டு வார காலம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது ஆகவே கனமழையின் காரணமாக, சில மாவட்டங்களில் விடுமுறை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அதனை ஈடு செய்யும் விதத்தில் தமிழகத்தில் இருக்கின்ற தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும், மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல பள்ளிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே இது பற்றி முடிவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.