மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் விடாமுயற்சி. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 1996-ம் ஆண்டு வெளியான பிரேக்டவுன் என்ற ஆங்கில படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது.
படத்தின் டீசர், ட்ரெயலர், பாடல்கள் என அனைத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. எனினும் 2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் இந்த படத்தின் மீதா எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இன்று காலை முதலே ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். எனினும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. எனினும் முதல் நாள் வசூலில் எந்த பாதிப்பும் இருக்காது என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விடாமுயற்சி படத்தில் நடிக்க அஜித்குமாருக்கு ரூ.105 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தனது திரை வாழ்க்கையில் அஜித் வாங்கிய அதிகபட்ச சம்பளம் இது தான். நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் நடிப்பதற்காக ரூ. 5 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா ரூ.6 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். ரெஜினா கசாண்ட்ராவுக்கு இந்த படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம்.
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் இந்த படத்தில் நடிக்க ரூ. 40 லட்சம் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திற்கு ரூ. ரூ.8 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாம். படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். விடாமுயற்சி படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூ. 280 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
Read More : பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான அஜித்தின் விடாமுயற்சி.. படம் எப்படி இருக்கு..? விமர்சனம் இதோ..