WhatsApp: வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம், EB கட்டணம், தண்ணீர் கட்டணம், ப்ரீபெய்டு ரீசார்ஜ், வாடகை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தும் வகையில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை இயக்கி வருகிறது. வாட்ஸ்அப் என்பது நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச நாம் பயன்படுத்தும் ஒரு செயலி. இந்தப் பயன்பாடு எப்போதும் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிக்கும். இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
மின்வாரிய இணையதளத்திலும் பல்வேறு கூகுள் பே போன்ற பேமெண்ட் செயலிகளும் மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ள நிலையில், இந்தப் புதிய வசதி அறிமுகமாகிறது. அதாவது தனது சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் கட்டணங்களை செலுத்தும் சேவையை வாட்ஸ் அப் பேமெண்ட் வழங்கப் போகிறது. இதன்மூலம் EB கட்டணம், தண்ணீர் கட்டணம், ப்ரீபெய்டு ரீசார்ஜ், வாடகை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தலாம். தற்போது, பீட்டா, வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள இச்சேவை விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.
Readmore: அதிர்ச்சி!. மனித மூளையில் ஸ்பூனில் அள்ளும் அளவுக்கு பிளாஸ்டிக்!. ஆய்வில் வெளியான தகவல்!.