தமிழகத்தில் முக்கிய ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களின் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்கள் சோதனையின் அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளன. நெல்லை – பாலக்காடு – நெல்லை (வண்டி எண்.16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் – மதுரை (வண்டி எண்.12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் மணப்பாறை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். அதேபோல, சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் (வண்டி எண்.22661) ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். நெல்லை – பாலக்காடு (வண்டி எண்.16791) பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும்.
ராமேஸ்வரம் – பனாரஸ் (வண்டி எண்.22535) வாராந்திர ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் – நெல்லை (வண்டி எண்.12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். கோவை – ராமேஸ்வரம் (வண்டி.எண்.16618) வாராந்திர ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும்.
மேலும் சென்னை எழும்பூர் – தூத்துக்குடி (வண்டி எண்.12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 முதல் நின்று செல்லும். சென்னை எழும்பூர் – கொல்லம் – சென்னை எழும்பூர் (வண்டி எண்.16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18 நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.